Home » » இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI)

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI)

    Written By Sadhikcdm on அக்டோபர் 06, 2012 | AM 12:00

    உலக அமைதி, ஏற்றதாழ்வுகளற்ற சமூகம், பாலியல் சமத்துவம் ஆகிய உயர்ந்த நோக்கங்களைக்கொண்டு, இன்றைய சமூகத்தை மாற்றியமைக்கப் போராடும் இளைஞர் அமைப்பு.


    ஒரு குடையின் கீழ் உலகை கொண்டுவந்து, தங்குதடையற்ற சுரண்டலை நடத்திவந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, சுரண்டலற்ற சமத்துவ உலகிற்கான கனவுடன் புரட்சிகர இயக்கங்கள் தோன்றி வளர்ந்தன. 


    இந்தியாவில் 300 ஆண்டுகாலமாக நீடித்துவந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், விவசாயம், நெசவு உள்ளிட்ட சிறுதொழில்களை நசியச் செய்தது. தங்குதடையற்ற சுரண்டலுக்காக, எத்தகைய மாபாதகத்தையும் செய்யத் துணிந்தது. இதற்கு தன்னுடைய ராணுவ பலத்தை பயன்படுத்தி, பல்லாயிரக்கணக்கான அப்பாவி தொழிலாளர்களையும், விவசாயிகளையும் கொன்று குவித்தது. இந்தியாவினுடைய, கனிம வளங்களையும், செல்வ ஆதாரங்களையும் கொள்ளையடித்தது.


    இந்த நிலையில், ஏகாதிபத்திற்கு எதிராகவும், சுதந்திரத்திற்காகவும் இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. சுதந்திரப் போராட்டத்திற்கான வழிமுறைகள் குறித்து விவாதங்கள் முன்வந்தன. அதில் காங்கிரஸ் பெருமுதலாளிகள், ஜமீந்தார்களின் தலைமையில் அமைதியான முறையில் ஆட்சி அதிகாரத்தை அடைவது என்று போராடினர். இந்து, இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகள், மத அடிப்படையில் சுதந்திர இந்தியா அமைய வேண்டும் என்று பிரிவினைவாதத்தை முன்வைத்தனர். ஆனால், உண்மையான சுதந்திரம் என்பது  மக்களுக்கானதே, சுரண்டலற்ற எதிர்கால இந்தியாவை உருவாக்குவது என்பது புரட்சிகர இளைஞர்களின் முழக்கமாக இருந்தது.


    1905 முதல் 1917 வரை நடைபெற்ற ரஷ்யப்புரட்சியின் எழுச்சி, இந்திய இளைஞர்களை சோசலிசத்தின் மீது ஈர்ப்புக் கொள்ளச் செய்தது. சுரண்டலற்ற அனைவருக்குமான இந்தியாவாக உருவாக வேண்டும் என்கிற கனவுடன் இருந்த இளைஞர்கள் எழுச்சியுற்றனர். மாவீரர் கத்தார் சிங் தலைமையில் “நவஜவான் பாரத் சபா” என்கின்ற அமைப்பை மாவீரன் பகத்சிங், சந்திரசேகர ஆசாத், ராஜகுரு, சுகதேவ், பகவதிசரன், கிஷோரிலால், சிவ வர்மா உள்ளிட்ட இளைஞர்கள் துவக்கினர்.


    இவர்கள் லட்சியக்கனவுகளைச் சுமந்து தேசத்தின் விடுதலைக்காகப் போராடி, களப்பலியாகினர். இவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் நெஞ்சில் ஏந்தி - சுதந்திர இந்தியாவில் 1980, நவ.3 ஆம் தேதி, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், உலக அமைதியை வலியுறுத்திய வெள்ளைக்கொடியில், ஐந்து கண்டங்களில் வாழும் மக்களின் சகோதரத்தையும், ஏற்ற தாழ்வுகளற்ற வாழ்க்கைக்கான லட்சியத்தைக் குறிக்கும் சிவப்பு நட்சத்திரம் பொறித்த கொடியை உயர்த்தி,  ”இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்” துவங்கியது. 


    ஏகாதியத்தியம் தகரட்டும், சோசலிசம் மலரட்டும் என்கிற முழக்கங்களுடன் அனைவருக்கும், கல்வி, அனைவருக்கும் வேலை கேட்டு உருவான இந்த இயக்கம் ஆயிரக்கணக்கான தியாகிகளை விதையாய் ஊன்றி விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது. இந்திய மக்களின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்குமான போராட்டங்களை அனுதினமும் நடத்திவருகிறது.


    170 லட்சம் இளைஞர்களை உறுப்பினராகக் கொண்டு, இந்தியாவின் முதற்பெரும் இளைஞர் சங்கமாகவும், உலகின் இரண்டாவது மிகப்பெரிய இளைஞர் அமைப்பாகவும் விளங்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தியாகம், சேவை, போராட்டம் என்ற பாதையில் இலட்சிய இளைஞர்களின் சங்கமமாக உள்ளது.
    தொடர்புடைய பதிவுகள் :


    - See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf

    2 comments:

    1. Nearly more than 15 years my brother is having family issues still he is trusting legally and waiting for his better life.but still we are expecting for good thing. Can you help and advice me.

      பதிலளிநீக்கு

    Comments

    .

    Recent Post

    மாற்றம் காண உழைப்பவர்கள்

    Popular Posts

    post

    .